Porrentruy JU வில் உள்ள Esplanade Centre இல், Migros கிளையில் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் இரவு முழுவதும் கடைக்கும் அடைக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
82 வயது மூதாட்டி ஒருவர் வோக்கரின் உதவியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்.
கடை மூடப்படும் அறிவிப்பு, ஒலிபெருக்கியில் வெளியிடப்பட்ட போது. அந்த வயதான பெண் அதனைக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் விளைவாக, கடையின் கதவுகள் மூடப்பட்டு, அவர் கடைக்குள் சிக்கிக் கொண்டார்.
இரவு முழுவதும் அவர் அங்கேயே கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்தப் பெண் தனது செல்போனை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்த்தால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை.
மறுநாள் கடை திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
முதல் ஊழியர் அதிகாலை ஐந்து மணியளவில் வந்து 82 வயது மூதாட்டியை மீட்டார்.
இது ஒரு துரதிர்ஷ்டவசமான தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று Migros கூட்டுறவு கூட்டமைப்பு கூறுகிறது.
யாராவது தங்கள் விருப்பத்திற்கு மாறாக எங்கள் கிளைகளில் ஒன்றில் இரவு தங்குவது மிகவும் அசாதாரணமானது.
அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் எனத் தெரிவித்துள்ளது.
மூலம்- 20min.