4.4 C
New York
Sunday, February 22, 2026

இலங்கையில் இருந்து கொண்டு சென்ற சொத்துக்களை மீட்க சுவிஸ் உதவும்.

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு, சுவிஸ் அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிறி வோல்ட் (Siri Walt) தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து, சுவிட்சர்லாந்து தூதுவர் இதன் போது வழிகாட்டுதல் வழங்கினார்.

இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்கவும்,  அவர் இணக்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர்  நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்  சிறி வோல்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போதே சுவிஸ்  தூதுவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

Related Articles

Latest Articles