26.5 C
New York
Thursday, September 11, 2025

பார்சல் குண்டுவெடிப்புகள் குறித்து நீடிக்கும் மர்மம் – கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலை.

பல மாதங்களாக ஜெனீவாவை கவலையடையச் செய்து வரும் பார்சல் குண்டு வழக்கு இன்னும் மர்மமாகவே உள்ளது.

இந்த விசாரணையின்  போது, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டதாக நம்பப்படவில்லை.

முதல் சந்தேக நபரான 26 வயதான சுவிஸ் நாட்டவர் ஏற்கனவே கிறிஸ்துமஸ் தருணத்தில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இரண்டாவது சந்தேக நபரான 32 வயதான சுவிஸ் நாட்டவர் நேற்று விடுவிக்கப்பட்டார்.

தீவிர பொலிஸ் விசாரணைகளுக்குப் பின்னர், இருவரையும் காவலில் வைத்திருக்க இனி எந்த காரணமும் இல்லை என்று சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்-ஜீன் மற்றும் கிரேஞ்ச்-கனலில் இரண்டு பொட்டலங்கள் வெடித்ததைத் தொடர்ந்து இரு சகோதரர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வெடிப்புகளில் ஒரு ஆணும் பன்னிரண்டு வயது சிறுமியும் காயமடைந்தனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles