Basel நகரில் இன்று அதிகாலை ஒரு உணவகத்திற்கு வெளியே இரண்டு பேர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
எனினும், இலக்கு வைக்கப்பட்ட இரண்டு பேரும், காயமின்றித் தப்பித்துள்ளனர்.
பொலிசார் நீண்ட தேடுதலுக்குப் பின்னர், சந்தேக நபரைக் கைது செய்தனர்.
ஒழுங்கீனமான நடத்தைக்காக, அந்த நபர் முன்னர், பப்பில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், 45 வயதுடைய துருக்கியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin.