Vaud கன்டோனில் உள்ள Château-d’Oex இல் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி காற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
உயரத்தில் பலத்த காற்று வீசுவதால் பலூன்கள் பறக்கவிடப்படுவது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, விமானங்கள், ஹெலிகொப்டர்கள் பறப்பு, மினி-பலூன்கள் மற்றும் விமானக் கண்காட்சி என்பன நடைபெறுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
45வது ஆண்டாக நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து 60க்கும் மேற்பட்ட விமானிகள் வந்துள்ளனர்.
பெப்ரவரி 2 ஆம் திகதி வரை இந்த திருவிழா இடம்பெறும்.
மூலம்- swissinfo