-1.3 C
New York
Wednesday, December 31, 2025

சூரிச்சில் Tesla store  மீது பெயின்ட் வீச்சு.

சூரிச்சில்  Pelikanstrasseஇல்  உள்ள Tesla store  மீது நேற்று மதியம் பெயின்ட் வீசப்பட்டுள்ளது.

சூரிச் நகர பொலிசார் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

குற்றவாளிகளின் சரியான நோக்கமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tesla store  அமெரிக்க செல்வந்தரான எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமானதாகும்.

அவர் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார் என்பதுடன்,  அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தும் பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மூலம்-20min.

Related Articles

Latest Articles