-0.3 C
New York
Tuesday, December 30, 2025

இளம்பெண் கொலை – குற்றவாளி தற்கொலைக்கு முயற்சி.

Ticino கன்டோனில் உள்ள Lodrino வில், இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை  5 மணிக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

வெளிநாட்டில் வசிக்கும் 21 வயதுடைய ருமேனிய பெண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இது ஒரு கொலை என காவல்துறையினர் நம்புகின்றனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து,  27 வயதுடைய சுவிஸ் இளைஞன், தனது உயிரை மாய்க்க முயன்று  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளம் பெண்ணின் மரணத்திற்கான காரணம் மற்றும் நிகழ்வுகளின் வரிசை குறித்த விசாரணை நடந்து வருகிறது.

விசாரணைக்கு அரசு வழக்கறிஞர் சியாரா பஸ்ஸி தலைமை தாங்குகிறார்.

தற்போது மேலதிகமான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மூலம்-20min.

Related Articles

Latest Articles