பாசலில் உள்ள மார்க்ட்பிளாட்ஸில் கணவனை மனைவி கொலை செய்துள்ளார்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, 48 வயது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை பொலிசாரைத் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தனது கணவனை கொலை செய்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து அதிகாலை 4 மணியளவில், அவர்களின் வீட்டிற்குச் சென்ற பொலிசார், ஆண் ஒருவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
இறந்தவர் 56 வயதான சுவிஸ் நாட்டவர் என்றும், கைது செய்யப்பட்ட பெண் 48 வயது ரஷ்ய குடியுரிமை கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin