வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுப்பதை தடை செய்வதற்கு பெடரல் கவுன்சிலர் பீட் ஜோன்ஸ் திட்டமிட்டுள்ளார்.
குழந்தைகள் துஷ்பிரயோகத்தை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
கடந்த காலங்களில், குறிப்பாக இலங்கையில் இருந்து அதிகளவில் குழந்தைகள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பாக கடுமையான விதிகள் அல்லது தடையை நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
மத்திய நீதி மற்றும் காவல்துறைத் துறையின் தலைவர் பீட் ஜோன்ஸ், வெளிநாடுகளில் குழந்தைகளைத் தத்தெடுப்பதை முற்றிலுமாக தடை செய்யவதற்கு, விரைவில் மத்திய கவுன்சிலில் உள்ள தனது சகாக்களுக்கு யோசனையை முன்மொழிவார்.
இலங்கையில் இறந்து பிறந்ததாக கூறப்பட்ட, குழந்தைகள் திருடப்பட்டு, சுவிஸ் தம்பதிகளுக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்ட பல சம்பவங்கள் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மூலம்- 20min.