16.6 C
New York
Thursday, September 11, 2025

அதிவேகத்தில் மோதிய கார்- ஒருவர் பலி.

Langnau am Albis  இல் நேற்றிரவு நடந்த ஒரு  விபத்தில், வாகனத்தில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

வாகனத்தில் இருந்த மற்றொருவரும் பாதசாரியும்  படுகாயமடைந்தனர்  என்று சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

இரவு 10 மணிக்குப் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றது.

43 மற்றும் 35 வயதுடைய இரண்டு இத்தாலிய ஆண்களுடன் சென்ற கார், சூரிச் நோக்கி அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றது.

கார் வீதியின் வலது பக்கத்திலுள்ள ஒரு வீட்டின் மூலையில் மோதி, பின்னோக்கிச் சென்று, வீதியைக் கடந்து, இடது பக்கத்திலுள்ள தடுப்புச் சுவரில் மோதியது.

ஒருவர் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் விபத்து நடந்த இடத்திலேயே அவர் இறந்தார்.

ஆரம்ப மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, ஒருவர் மீட்பு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தில் காயமடைந்த 37 வயதான உக்ரேனிய நபர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles