ஜெனீவாவில் உள்ள Four Seasons Hotel des Bergues இல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று இரவு 9:30 மணியளவில் எச்சரிக்கை மணி எழுப்பப்பட்டது.
தீவிபத்தை தொடர்ந்து ரோன் நதிக்கரையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலின் விருந்தினர்கள் சிலர் வெளியேற்றப்பட்டனர்.
கட்டடத்தின் மேல்மாடியில் தீப்பிழம்புகள் வெடித்தன என்றும், மீட்புப் பணியாளர்களின் 20 நிமிட போராட்டத்துக்குப் பின்னர் இரவு 10:20 மணியளவில் தீ கட்டுக்குள் வந்ததாகவும் தீயணைப்புத் துறையினர். தெரிவித்தனர்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட விருந்தினர்கள் அண்டை ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.