1990 ஆம் ஆண்டு நிலையுடன் ஒப்பிடும்போது, 2035 ஆம் ஆண்டுக்குள் தனது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைந்தது 65% குறைப்பதற்கு, சுவிட்சர்லாந்து இலக்கை நிர்ணயித்துள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்த புதிய இலக்குக்கு சுவிஸ் அரசாங்கம் நேற்று பச்சைக்கொடி காட்டியுள்ளது.
1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2031 மற்றும் 2035 க்கு இடையில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் சராசரியாக 59% குறைக்கப்படும் என்று சுவிட்சர்லாந்தின் நிர்வாக அமைப்பான பெடரல் கவுன்சில் புதன்கிழமை அறிவித்தது.
உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கு அடையப்படும்.
1.5 டிகிரிக்கு மேல் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாரிஸ் ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளும் தங்கள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோருகிறது.