Zermatt ski பிரதேசத்தில், Blauherd மற்றும் Tuftern இடையே மயக்கமடைந்த நிலையில், பனிச் சறுக்கு வீரரை Valais பொலிசார் கண்டுபிடித்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்பு சேவைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, 25 வயதான அர்ஜென்டினாவைச் சேர்ந்த அந்த நபர் சியோனில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகொப்டர் மூலம், கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று மதியம் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
மூலம்- swissinfo