அஞ்சல் ஊழியர் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக ஸ்மார்ட்போன்கள், டப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் அடங்கிய பொதிகளைத் திருடியதாக ஜெனீவா நீதிமன்றத்தில், நேற்று ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜூலை 2021 முதல் பிப்ரவரி 2023 வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று செல்போன்களை திருடப்பட்டதாக நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அஞ்சல் நிறுவனத்தில் 32 ஆண்டுகளாக பணிபுரிந்த 50 வயதான அந்த பெண் ஊழியர், கூறினார்.
குற்றங்களால் ஏற்பட்ட சேதம் 275,000 பிராங்குகள் ஆகும்.
திருட்டுகள் தொடங்கிய போது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அவர் அஞ்சல் நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
கண்காணிப்பு கேமராவில் அந்தப் பெண் சிக்கியதை அடுத்து வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரது வீடு சோதனையிடப்பட்ட போது, ஜெனீவா பொலிசார் அந்தப் பெண்ணின் வசம் 66 மின்னணு சாதனங்களைக் கண்டுபிடித்தனர்.
அவருடைய இப்போதைய கூட்டாளியே தான் அவளை இதைச் செய்யத் தூண்டியுள்ளார்
நான் இதற்கு முன்பு எதையும் திருடியதில்லை.
அவள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த அவளுடைய தாய்க்கும் மகனுக்கும் பணம் கேட்டாள்.
என்னிடம் எதுவும் இல்லாததால், நான் இந்தத் திருட்டுகளைச் செய்தேன். நான் வருந்துகிறேன்.”என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அஞ்சல் ஊழியர் திருட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஒரு வருடம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
அவர் 275, 000 பிராங்குகளை அஞ்சல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
மற்றொரு வழக்கில், திருடப்பட்ட பொருட்களை வணிக ரீதியாகப் பெற்றதற்காக அவரது கூட்டாளிக்கு 18 மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மூலம்- swissinfo