Vaud கன்டோனில் உள்ள Château-d’Oex இல் நடைபெற்ற 45வது சர்வதேச வெப்ப பலூன் திருவிழா நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.
ஒன்பது நாட்கள் நடந்த இந்த விழா, கிட்டத்தட்ட 50,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
மழையினால், சில நாட்கள் விழா ரத்து செய்யப்பட்ட போதிலும், விழா சாதகமாக இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
ஐந்து நாட்கள், விமானிகள் மற்றும் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை முழுமையாக ரசித்தனர்.
45வது ஆண்டு பலூன் விழாவில், 220க்கும் மேற்பட்ட வான் பயணங்கள் இடம்பெற்றது.
மூலம்- swissinfo