13.7 C
New York
Wednesday, October 7, 2026

நிறைவுக்கு வந்த பலூன் திருவிழா- 50 ஆயிரம் பேர் திரண்டனர்.

Vaud கன்டோனில் உள்ள Château-d’Oex இல் நடைபெற்ற 45வது சர்வதேச வெப்ப பலூன் திருவிழா நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

ஒன்பது நாட்கள் நடந்த இந்த விழா, கிட்டத்தட்ட 50,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

- Advertisement -

மழையினால், சில நாட்கள் விழா ரத்து செய்யப்பட்ட போதிலும், விழா சாதகமாக இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

ஐந்து நாட்கள், விமானிகள் மற்றும் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை முழுமையாக ரசித்தனர்.

45வது ஆண்டு பலூன் விழாவில், 220க்கும் மேற்பட்ட  வான் பயணங்கள் இடம்பெற்றது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles