சூரிச் கன்டோனில் உள்ள Winkel என்ற இடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், 84 வயது பெண் பாதசாரி உயிழந்தார்.
அவருடன் சென்ற 75 வயது முதியவர், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவரும், நேற்று மாலை வீதியைக் கடக்க முயன்ற போது, கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
காரை ஓட்டிய 18 வயது இளைஞன் மற்றும் அதில் இருந்த மூவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin