23.5 C
New York
Thursday, September 11, 2025

சுவிசில் மனைவியை கொலை செய்த இலங்கையர்- 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை?

Rupperswil லில் உள்ள ஒரு சிற்றுண்டிச்சாலையில், மனைவியைக் கொலை செய்த இலங்கையர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி காலை, இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது,

இலங்கையைச் சேர்ந்தவர்களான கணவனும் மனைவியும், ஒன்றாக அந்த சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றி வந்தனர்.

அன்றுகாலை அவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், 47 வயதுடையை மனைவியை, கணவன் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.

கணவன் கைது செய்யப்பட்டு தற்போது வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அரசு வழக்கறிஞர் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

இந்த விசாரணை Lenzburg மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

வழக்கு ஆரம்பிக்கும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles