21.5 C
New York
Saturday, June 20, 2026

விபத்துக்குள்ளான விமானத்தில் பெல்ஜியத்தின் கௌரவ தூதுவர்.

பெர்னில் நேற்று விபத்துக்குள்ளான  விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்துக்கான பெல்ஜியத்தின் கௌரவ தூதுவர் என பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Leuzigen நகராட்சியில் நேற்றுக்காலை 11.30 மணியளவில்  விமான ஓடுபாதைக்கு அருகே இருந்த வயல் வெளியில், விமானம் தரையிறங்கிய இந்த விபத்து இடம்பெற்றது.

ஓடுபாதை தெளிவாகத் தெரியாமை தான் விபத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 67 வயதுடைய ஆணும், 2 பெண்களும் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர் பெல்ஜியத்தின் கௌரவ தூதுவர் என்றும் அவரே விமானத்தை ஓட்டினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம் -20min.

Related Articles

Latest Articles