Posat FR இல் மின்கம்பம் முறிந்து விழுந்து 16 வயதுடைய இளைஞன் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
உள்ளூரில் குறைந்த அழுத்த மின் விநியோக பராமரிப்பு பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவரான 16 வயதுடைய, தொண்டுப் பணியாளர் மரத்தினாலான மின்கம்பத்தில் ஏறிய போது அது முறிந்து விழுந்தது.
9 மீற்றர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
18 வயதுடைய மற்றொரு பணியாளர் காயம் அடைந்துள்ளார்.
மூலம் -20min.