Chur இல் உள்ள கே வி வர்த்தகப் பாடசாலைக்கு குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மின்னஞ்சல் மூலம் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கிருந்து 350 தொழிற்பயிற்சி மாணவர்களும், 20 ஆரம்ப பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பணியாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
St. Gallen கன்டோனல் பொலிசாரும் தீயணைப்பு பிரிவினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
குண்டுகளை கண்டுபிடிக்கும் 4 மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலில், எந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து இரவு 8.45 மணியளவில் பாடசாலை வளாகம் மீண்டும் திறந்து விடப்பட்டது.
மூலம் -20min.