2024 பிப்ரவரி 1,ஆம் திகதி முதல் 2025 ஜனவரி இறுதி வரை சுவிஸ் வேட்டைக்காரர்கள், சட்டப்பூர்வமாக 101 ஓநாய்களைக் கொன்றுள்ளனர்.
விபத்துக்கள் அல்லது இயற்கை காரணங்களால் மேலும் ஆறு ஓநாய்கள் இறந்துள்ளதாக கோரா பவுண்டேசன் தெரிவித்துள்ளது.
கிராபுண்டன் மாகாணத்தில் 47 ஓநாய்களும், வலாய்ஸ் மாகாணத்தில் 34 ஓநாய்களும், வோட் மாகாணத்தில் ஐந்தும், சென். கலன் மாகாணத்தில் மூன்றும், டிசினோ மாகாணத்தில் மூன்றும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டில் சுமார் 80 ஓநாய்கள் கொல்லப்பட்டன.
2022/2023 ஆம் ஆண்டில் 39 ஓநாய்களும், 2021/2022 ஆம் ஆண்டில் 16 ஓநாய்களும் கொல்லப்பட்டன.
அதே நேரத்தில், கோராவின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் குறைந்தது 135 ஓநாய் குட்டிகள் பிறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி இறுதியில் சுவிட்சர்லாந்தில் 26 சுவிஸ் ஓநாய் கூட்டங்களும் 11 எல்லை தாண்டிய கூட்டங்களும் இருந்தன.
அவற்றில் ஒன்பது ஓநாய்களை அழிக்க மாகாணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மூலம்- swissinfo