பெர்ன் பிராந்திய சிறையில் புதன்கிழமை காலை, 22 வயதுடைய கைதி ஒருவர் அவரது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரம்ப விசாரணைகளின்படி, அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெர்ன் கன்டோனல் பொலிசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் பிப்ரவரி 5ஆம் திகதி காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பெர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள தடயவியல் மருத்துவ நிறுவனமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
இறந்தவர் ஒரு மொராக்கோ குடிமகன் என்றும், மரணத்தின் சரியான சூழ்நிலைகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min