Solothurn கன்டோனில் உள்ள Schönenwerd இல் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 12.05 மணியளவில் இந்தச் சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அங்கு ஒரு வன்முறைக் குற்றம் இடம்பெற்றதாக சந்தேகிப்பதாகவும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சம்பவம் இடம்பெற்ற சூழ்நிலைகள் மற்றும் மரணத்திற்கான காரணம் போன்றன குறித்து விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்த பொலிசார், உயிரிழந்த பெண் பற்றிய எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
மூலம்- 20min.