Riehen இல் உள்ள Schmiedgasse ரயில்வே கடவையில், கார் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கார்ச் சாரதி சரியான நேரத்தில் வெளியேறியதால் காயமின்றி தப்பினார்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
Basel பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்- 20min.