உக்ரேன்- ரஷ்ய மோதலைத் தீர்ப்பதற்கான ஒரு மத்தியஸ்தராக சுவிட்சர்லாந்து செயற்பட முடியாது என, பேர்னில் உள்ள, ரஷ்ய தூதுவர் செர்ஜி ஹார்மோனின் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாக ரஷ்ய எதிர்ப்புப் போக்கை சுவிஸ் கடைப்பிடிப்பதால் அது சாத்தியமற்றது.
ஆரம்பத்திலிருந்தே சுவிஸ் அதிகாரிகள் தெளிவாக கீவ் சார்பு நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.
அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவிரோத ரஷ்ய எதிர்ப்புத் தடைகளையும் ஏற்றுக்கொண்டனர்.
சுவிஸ் சட்டவிரோதமாக ரஷ்ய அரசு சொத்துக்கள் மற்றும் ரஷ்ய குடிமக்களின் பணத்தை முடக்கியது.
அதே நேரத்தில், ரஷ்ய தலைமையை தண்டிக்க ஒரு சர்வதேச தீர்ப்பாய யோசனையை பேர்ன் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
சுவிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள் அரசின் நடுநிலை நிலையை மதிப்பிழக்கச் செய்தன.
அதனை இப்போது ஒரு பாரபட்சமற்ற மத்தியஸ்தராகவும் நேர்மையான தரகராகவும் கருத முடியாது.“ என்றும் ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
மூலம்- Eadaily