அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுவிட்சர்லாந்தையும், குறிவைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வங்கியான UBS நடத்திய ஆய்வின்படி, மருந்துத்துறை முக்கியமாக பாதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும், பொருட்களில், 60% மருந்துகளாகும்.
அங்கிருந்து சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்யப்படுவதை விட, கணிசமாக அதிகமான மருந்துகள் அமெரிக்காவிற்கு செல்கின்றன.
இத்தகைய வர்த்தக உபரிகள் ட்ரம்பிற்கு கோபமூட்டுகிறது.
எனவே, இந்தத் துறையின் மீது வரி விதிக்கப்படலாம் என்று, UBS இன் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அத்தகைய வரிகள் ஒரு பிரச்சினையாக இருக்கும்.
இதனால், நீண்கால வர்த்தகத் தடைகள், மருந்து நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறைகளை அமெரிக்காவிற்கு நகர்த்தக் கூடும்.
அத்தகைய இடமாற்றம் சுவிட்சர்லாந்தில் மதிப்பு உருவாக்கம் மற்றும் வரி வருவாய் அடிப்படையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
மூலம் – swissinfo