Aargau கன்டோனில் உள்ள Beznau அணுமின் நிலையத்தின் 2 ஆவது உலை நேற்று அவசரமாக மூடப்பட்டது.
வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது கண்டறியப்பட்ட ஒரு பிரச்சினையை அடுத்து, நேற்று பிற்பகல் 1.05 மணியுடன் இந்த அணுஉலை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் பெடரல் அணுசக்தி பாதுகாப்பு ஆய்வாளருடன் (ENSI) கலந்தாலோசித்த பிறகு அது மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான சோதனையின் போது தவறான செயல்பாடு கண்டறியப்பட்டதாகவும், அணுமின் நிலையம் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான நிலையில் இருந்தது என்றும் அதனை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அணுஉலை மீள இயங்கத் தொடங்கும் போது, அணுசக்தி அல்லாத பகுதியில் (மின்சாரம் அல்லாத பகுதியில்) வெள்ளை நீராவி எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – swissinfo