Zollikerberg இல் பாதசாரி ஒருவர் குப்பை லொறி மோதி படுகாயம் அடைந்தார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
குப்பை லொறியினால் மோதப்பட்ட 53 வயதுடைய பாதசாரி, சில மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
படுகாயம் அடைந்த அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து இடம்பெற்ற சூழ்நிலை குறித்து சூரிச் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்- 20min.