Schönenwerd இல் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என, Solothurn கன்டோனல் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை சுவிஸ் பிரஜையான 40 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
அவரது மரணம் தொடர்பாக அன்றைய தினமே கிறீக் பிரஜையான, 33 வயதுடைய ஆண் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரே இந்த குற்றத்தை இழைத்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.