Pratteln இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக Basel பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Oberemattstrasse இல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் வெளியே 35 வயதுடைய பெண் உயிரிழந்த நிலையில் இருந்தார் என்றும், உள்ளே 70 வயதுடைய ஆண் சடலமாக மீட்கப்பட்டார் என்றும் பொலிசார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த ஆண் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.