ஜெர்மனியின் ஹம்பேர்க் நகரில் அதிவேக ICE ரயில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் Rönneburg மாவட்டம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றுடன் ரயில் மோதியதில் 55 வயதுடைய ஒருவர் படுகாயம் அடைந்து மரணமானார்.
காயமடைந்தவர்களில் 6 பேர் மோசமாக காயம் அடைந்துள்ளனர்.
ரயிலில் இருந்த 291 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து,ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மூலம்- 20min.