St. Gallen இல் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
42 வயதுடைய குறித்த பெண், கடந்த 5ஆம் திகதி வீட்டில் இருந்து இ-பைக்கில் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
அதன் பின்னர் வீடு திரும்பாத நிலையில் கன்டோன் பொலிசார் தீவிரமாகத் தேடுதல் நடத்தியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று மற்றொரு கன்டோனில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அவர், St. Gallen இல் காணாமல் போன பெண் தான் என்று கன்டோன் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
அவர் எப்படி இறந்தார், எப்படி மற்றொரு கன்டோனுக்குச் சென்றார் என்பன போன்ற எந்த விபரங்களும் வெளியாகவில்லை.
மூலம்- 20min.