24.3 C
New York
Saturday, August 15, 2026

சட்டவிரோத குடியேறியை கைது செய்ய முயன்ற பொலிசார் காயம்.

சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய முயன்ற இரண்டு பொலிசார் காயம் அடைந்திருப்பதாக பெர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Bümplizstrasse இல் திங்கட்கிழமை காலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பணியில் இருந்த பொலிசார் ஒருவரின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு சோதனையிட முயன்றனர்.

அவர் கால்நடையாகத் தப்பிச் சென்ற நிலையில் பொலிசார் அவரை விரட்டிச் சென்று கைது செய்ய முயன்றனர்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொலிசாரைத் தாக்கினார்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பொலிசார் காயம் அடைந்தனர்.

பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணைகளை நடத்திய போது, 26 வயதுடைய அவர் துனீசியாவைச் சேர்ந்தவர் என்றும் பிரான்சில் பதிவு செய்திருந்த அவர் சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles