உக்ரைன் போரில் பங்கெடுத்த சுவிஸ் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
உக்ரைன்- ரஷ்ய போரில் உயிரிழந்த முதலாவது சுவிஸ் பிரஜை இவராவார்.
உக்ரைன் சார்பில் அவர் போரில் பங்கெடுத்திருந்தார் என உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள்காட்டி கீவ்வில் உள்ள சுவிஸ் தூதரகம் அறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் உயிரிழந்தார் என கூறப்பட்டாலும், எங்கே நடந்த சண்டையில் எப்படி இறந்தார் என்றோ எந்த படைப்பிரிவுடன் இணைந்து செயற்பட்டார் என்றோ உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிடவில்லை.
சுவிஸ் பிரஜைகள் பிற நாடு ஒன்றில் கூலிப்படையாக போரில் பங்கெடுப்பதற்கு சுவிஸ் சட்டப்படி தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
மூலம்- swissinfo