Chur, இல் உள்ள Giacometti பாடசாலையில் இன்று பட்டாசு வெடித்ததில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலையின் படிக்கட்டுகளில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது.
- Advertisement -

இதையடுத்து பொலிசார் விரைந்து சென்று தேடுதல்களில் ஈடுபட்டனர்.
இந்த பட்டாசு விபத்தில் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 24 மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக Graubünden கன்டோனல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்- swissinfo


