Betty Bossi Frischback-Semmeli IP Suisse (400g) தயாரிப்பை Coop மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது.
புதிதாக தயாரிக்கப்பட்ட Semmeliக்குப் பதிலாக, Panini Rustico என்ற தயாரிப்பு கவனக்குறைவாக பொதி செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
மேலும் இவற்றில் எள் உள்ளது, இது பொதியில் அறிவிக்கப்படாத ஒரு ஒவ்வாமை ஆகும்.
எள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சாத்தியமான உடல்நல ஆபத்து உள்ளது.
அவர்கள் தயாரிப்பை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இருப்பினும், மற்ற அனைத்து நுகர்வோருக்கும், நுகர்வு பாதுகாப்பானது.
வாடிக்கையாளர்கள் பொருட்களைத் திருப்பித் தருமாறு Coop அறிவித்துள்ளதுடன் கொள்முதல் விலை திரும்ப தரப்படும் என்றும் கூறியுள்ளது.
மூலம்- bluewin