17.5 C
New York
Wednesday, September 10, 2025

கனடாவில் 80 பேருடன் தலைகீழாக கவிழ்ந்த டெல்டா விமானம்.

கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் Delta Air Lines விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் (Minneapolis) நகரில் இருந்து புறப்பட்ட விமானம், பனிபடர்ந்த ஓடுபாதையில்  தலையிறங்கிய போது, தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அந்த விமானத்தில் 80 பேர் இருந்தனர் என்றும் 18 பேர் காயம் அடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு, மீட்புப் பணிக் குழு, ஹெலிகொப்டர்கள், மருத்துவ உதவி வாகனங்கள் போன்றவை அனுப்பப்பட்டுள்ளன.

பியர்சன் விமான நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles