21.6 C
New York
Wednesday, September 10, 2025

500 கிலோ ஹஷீஸ் போதைப்பொருளை கடத்திய கும்பல் சிக்கியது.

பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு ஒன்றை Valais  கன்டோனல் அதிகாரிகள் கண்டுபிடித்து அதனுடன் தொடர்புடைய 30 பேரைக் கைது செய்துள்ளனர்.

18 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது  செய்யப்பட்டவர்களில் சிறார்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் 1இலட்சத்து 75 ஆயிரம் பிராங் பெறுமதியான 2 கிலோ கொகைன் மற்றும் 4 மில்லியன் பிராங் பெறுமதியான 500 கிலோ ஹஷீஸ் போதைப் பொருட்களை Valais  கன்டோனுக்குள் கடத்தியுள்ளனர்.

Sierre மற்றும் அதனை அண்டிய பிராந்தியங்களில் இந்தக் கும்பல் தீவிரமாக செயற்பட்டு வந்துள்ளது.

இந்த குற்றச் செயலுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles