Bazenheid இல் பன்றிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்துக்குள்ளாகியதில், போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.
நேற்றுக்காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான பன்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் , Bazenheid இல் உள்ள Neue Industriestrasse இல் திரும்பும் போது விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
பண்ணை ஒன்றில் இருந்து கொல்களத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பன்றிகளை ஏற்றிய வாகனமே விபத்தில் சிக்கியது.
இதில் சில பன்றிகள், வாகனத்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டன. ஒரு பன்றி உயிரிழந்த துடன் மேலும் பல காயம் அடைந்தன.
மாற்று வாகனம் கொண்டு வரப்பட்டு, பன்றிகள் அதில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படும் வரையில் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
மூலம்- 20min.