சூரிச்சில் உள்ள Niederhasli அஞ்சல் அலுவலகத்தில் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளை இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
43 வயதுடைய அஞ்சல் பணியாளரான பெண்ணை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய இரண்டு பேர் சில ஆயிரம் பிராங் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு பின்புறமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
உடனடியாக பொலிசார் தேடுதல்களை நடத்திய போதும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சூரிச் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூலம்- 20min.