-0.2 C
New York
Tuesday, December 30, 2025

லூசெர்ன்  திருவிழா அணிவகுப்புகளுக்காக வீதிகள் மூடப்படும்.

லூசெர்ன்  திருவிழாவில்  அணிவகுப்புகள் வரும் வியாழன் மற்றும் மார்ச் 3 திங்கட்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்று லூசெர்ன் காவல்துறை அறிவித்தது.

அவை Haldenstrasse  இல் இருந்து தொடங்கி Schweizerhofquai – Seebrücke – Bahnhofplatz – Pilatusstrasse – Winkelriedstrasse , மற்றும் Waldstätterstrasse / Kauffmannweg / Helvetiaplatz area. பகுதிகளால் செல்லும்.

சதுக்கத்தில் இருக்கைகள் கொண்ட ஒரு பார்வையாளர் அரங்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களிலும், முக்கிய போக்குவரத்து பாதையான Schweizerhofquai – Seebrücke – Pilatusstrasse மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும்.

Schlossberg, Spitalstrasse, Kreuzstutz  வழியாக Baselstrasseக்கு போக்குவரத்து மாற்றி விடப்படும் என  லூசெர்ன் காவல்துறையின் ஊடக செய்தித் தொடர்பாளர் உர்ஸ் விக்கர் கூறினார்.

இரவு 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை, Seebrücke – Schweizerhofquai போக்குவரத்து மூடப்படும்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles