-0.2 C
New York
Tuesday, December 30, 2025

இடி போன்ற வெடிப்பை அடுத்து தடைப்பட்டது ரயில் போக்குவரத்து.

பெர்ன் மற்றும் ஓல்டன் இடையே ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக SBB தெரிவித்துள்ளது.

மின்வடத்தில் ஏற்பட்ட கோளாறினால் இந்த தடை ஏற்பட்டது.

இதனால்,  ICE, EC, IC, IC1, IC6, IC8, IC61, IC81, IR15, IR16 மற்றும் S23 பாதைகள் பாதிக்கப்பட்டன.

தாமதங்கள், ரத்து செய்தல்கள் மற்றும் மாற்றுப்பாதைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த இடையூறு குறைந்தது பதினொரு மணி வரை நீடிக்கும்.

திடீரென்று சுரங்கப்பாதையில் ஒரு இடி போன்ற சத்தம் கேட்டதாகவும், ஜன்னலில் இருந்து நீல நிற ஒளி தெரிந்ததாகவும், ரயிலில் பயணம் செய்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ரயில் ஊர்ந்து சுரங்கப்பாதைக்கு அப்பால் நின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் பயணிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவ்வாறு செய்யாமல்,  நடை வேகத்தில் ரயில்  Solothurnக்கு செல்ல முடிந்தது.

இரண்டு மணி நேரம் தாமதமாக அது Solothurn நிலையத்தை அடைந்தது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles