ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்று மதியம் 12:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக மோர்சாக் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
Schwyzerhöhestrasse இல் 73 வயதுடைய ஒருவர் கார் ஓட்டிச் சென்றபோது, இயந்திரப் பகுதியில் புகை மற்றும் தீப்பிழம்புகள் இருப்பதைக் கண்டார்.
அவர் உடனடியாக காரை நிறுத்தி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் எரியும் வாகனம் அருகிலுள்ள பகுதிக்கு தள்ளப்பட்டது.
மோர்சாக் தீயணைப்புத் துறையினரால் தீயை விரைவாக அணைக்க முடிந்தது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம் – polizeinews.ch

