20.3 C
New York
Thursday, June 18, 2026

3 கார்கள் மோதியதில் 3 பேர் காயம்.

Susch இல் உள்ள Hauptstrasse இல் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் 3:45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

79 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற கார், சந்திப்பில், இடதுபுறம் திரும்பிய போது, மற்றொரு கார் மீது மோதியது.

இதில் அந்த கார் வலதுபுறம் வீசப்பட்ட நிலையில், சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 79 வயது நபர், அவரது பயணி மற்றும் 39 வயது நபர் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூலம் – polizeinews.ch

Related Articles

Latest Articles