Vaud கன்டோனில், SP கட்சியின், தேசிய கவுன்சிலர் Roger Nordmann பெடரல் நாடாளுமன்றத்தில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
மார்ச் 20 ஆம் திகதியுடன் தாம் பெடரல் கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.
52 வயதான Roger Nordmann 2011ஆம் ஆண்டு தொடக்கம் Lausanne city நாடாளுமன்றத்திலும் பின்னர், பெடரல் கவுன்சிலிலும் அங்கம் வகித்து வருகிறார்.
அவரது இடத்திற்கு, Lausanne ஐச் சேர்ந்த Benoît Gaillard பெடரல் கவுன்சில் உறுப்பினராக பதவியேற்பார்.
மூலம்- bluewin