சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.
ரயில் நிலையத்திற்குள் மின்சார கோளாறினால் தீவிபத்து ஏற்பட்டு புகை எழுந்தது.
இதையடுத்து தீயணைப்பு பிரிவினர் பெருமளவில் குவிக்கப்பட்டதுடன், பிரதான மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் மின்சாரமும் தடைப்பட்டதால், அறிவிப்பு பலகைகள் செயலிழந்தன.
எனினும் ரயில் போக்குவரத்துகளில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை.
தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மூலம்- 20min.