சூரிச் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த கார் ஒன்று Sihltalstrasse இல் எதிர்த்திசையில் திரும்பிய போது, எதிரே வந்து கொண்டிருந்த வாகனத்துடன் மோதியது.
இந்த விபத்தில் விபத்திற்கு காரணமான காரை ஓட்டிச் சென்ற 18 வயதுடைய இளைஞனும், எதிரே வந்த காரின் 77 வயது சாரதியும் அதில் இருந்த பயணியும் படுகாயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதனால் சுமார் 3 மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
மூலம்- 20min.