St. Gallen இல் உள்ள Bohl என்ற இடத்தில் இரண்டு ஆண்களுக்கு இடையே நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, 26 வயதுடைய ஒருவர் கன்டோனல் பொலிசாருக்கு உதவி கோரி அவசர அழைப்பு விடுத்தார்.
பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற போது, காயமடைந்த நிலையில் இருந்த 26 வயதுடைய நபரை கண்டுபிடித்தனர்.
அவரது கழுத்தில் வெட்டுக் காயம் இருந்தது, மருத்துவ சிகிச்சைக்காக அவசர சேவைகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காயமடைந்த நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போதே, மற்றைய நபர் கழுத்தில் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 26 வயதுடைய சுவிஸ் நாட்டவர்ஆவார்.
மூலம்- 20min.