Bellinzona வில் நேற்று நடந்த களியாட்ட அணிவகுப்பில் (carnival parade) 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு 162வது Rabadan நிகழ்வில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பில் 53 குழுக்களும் பங்கேற்றன.
கடந்த ஆண்டு, வானிலை மோசமாக இருந்த காரணத்தால், களியாட்ட அணிவகுப்பில் கணிசமாகக் குறைவான மக்கள் கலந்து கொண்டனர்.
நேற்று பிரகாசமான நீல வானம் மற்றும் இனிமையான வெப்பநிலை காணப்பட்டது.
இதனால் நேற்று பிற்பகல் நகரின் முக்கிய வீதிகளில் வண்ணமயமான களியாட்டக் குழுக்கள் அணிவகுத்துச் சென்றன.
டிசினோ தலைநகரில் களியாட்டத் திருவிழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை தொடங்கின.
முதல் மற்றும் இரண்டாவது நாள் திருவிழா மாலைகளில் சுமார் 30,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை எந்த அசாதாரண சம்பவங்களும் இல்லை.
டிசினோவில் Rabadan மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான திருவிழாவாகக் கருதப்படுகிறது.
பேச்சுவழக்கில் Rabadan என்றால் சத்தம் என்று பொருள்.
மூலம்- bluewin